உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிண்டரோவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிராவில் முடித்தார் குகேஷ்

உலக செஸ் சாம்பின்ஷிப் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
Gukesh and Sindarov
Published on: 

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிண்டரோவின் கடும் சவாலை எதிர்கொண்டு ஆட்டத்தை டிராவில் முடித்தார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷுக்கு, சிண்டரோவ் கடுமையான நேர நெருக்கடியை ஏற்படுத்தினார். 38 நகர்வுகள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில், இக்கட்டான சூழலை சிறப்பாகக் கையாண்ட குகேஷ், ஆட்டத்தை 0.5-0.5 என்ற சமநிலையில் முடித்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் சிண்டரோவ் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நேர அளவில் கணிசமான முன்னிலையை பெற்றார். இருப்பினும், குகேஷ் தனது தற்காப்பு திறனை வெளிப்படுத்தி, அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தார். இரண்டாவது ஆட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

X