சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 12-ந் தேதி கேலோ இந்திய நீச்சல் போட்டி

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.
சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 12-ந் தேதி கேலோ இந்திய நீச்சல் போட்டி
Published on

சென்னை:

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com