பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
Published on

9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com