லா லிகா லீக்: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி பார்சிலோனா த்ரில் வெற்றி!

ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.
லா லிகா லீக்: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி பார்சிலோனா த்ரில் வெற்றி!
Published on

2024-25 லா லிகா லீக்ககில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டை 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது.

ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். ஆனால் அது அந்த அணி வெற்றி பெற போதுமானதாக இல்லை.

பார்சிலோனா அணிக்காக, ரஃபின்ஹா இரண்டு கோல்களையும், லாமின் ய்மல் மற்றும் எரிக் கார்சியா தலா ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த வெற்றியின் மூலம், லீக்கில் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பார்சிலோனா அணி, புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com