

உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசில் நட்பு ரீதியில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. நேற்று கொல்கத்தாவில் பிரேசில்- இந்தியா இடையிலான நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது. இதில் பிரேசில் நாட்டின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆனால பிரேசில் 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வில்லியன் முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் 42-வது நிமிடத்தில் பெட்ரோ ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் பிரேசில 2-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் சாமுவேல் லினோ கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது. இருந்த போதிலும் எக்ஸ்ட்ரா நேரத்தில் (90+5) சாமுவேல் லினோ மேலும் ஒரு கோல் அடிக்க பிரேசில் 4-0 என வெற்றி பெற்றது.