எனக்கு End-ஏ கிடையாது.. ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி

ஸ்பெயினிடம் போர்ச்சுகல் தோற்று வெளியேறியது.
 ரொனால்டோ
ரொனால்டோ
Published on
Summary

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் விளையாடுவது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் UEFA நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் சர்வதேசக் கால்பந்திலிருந்து உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

போர்ச்சுகல் அணி தனது யுஏஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் பயணத்தை செப்டம்பர் 24 அன்று சொந்த மண்ணில் வேல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது.

உலகக்கோப்பைக்கு பின்

2026 பிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஸ்பெயினிடம் போர்ச்சுகல் தோற்று வெளியேறியது.

அதுவே தனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என ரொனால்டோ சுட்டிக்காட்டிய போதிலும், சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

புதிய பயிற்சியாளர்

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு ராபர்டோ மார்டினெஸுக்குப் பதிலாக ஜார்ஜ் ஜெசஸ் போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணியில் ரொனால்டோவுடன் இணைந்து பணியாற்றி லீக் பட்டத்தையும் வென்ற அனுபவம் கொண்டவர் ஜெசஸ்.

"அணிக்குத் தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களும் எனக்குச் சமமானவர்களே. ரொனால்டோ சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் தொடர்வார், இல்லையெனில் வாய்ப்பு கிடைக்காது. அனைவரையும் ஒரே கோணத்திலேயே நான் அணுகுவேன்." என்று ஜெசஸ் தெரிவித்துள்ளார்.

சாதனையின் விளிம்பில் ரொனால்டோ

தற்போது 41 வயதான ரொனால்டோ, ஆண்களுக்கான சர்வதேசக் கால்பந்து வரலாற்றில் 146 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

கிளப் மற்றும் சர்வதேசப் போட்டிகள் சேர்த்து இதுவரை 979 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, 1000 கோல்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்ட இன்னும் 21 கோல்களே தேவையாக உள்ளது.

இந்த சாதனையைப் போர்ச்சுகல் அணியை விட அல் நாசர் கிளப் சார்பிலேயே அவர் விரைவாக எட்டுவார் என ஜெசஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com