யூரோ கோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது ஸ்பெயின்

ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது ஸ்பெயின்
Published on

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "பி"-யில் இடம் பிடித்துள்ள இத்தாலி- ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி ஒரு கோல் அடித்தார்.

இதன்பின் இத்தாலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com