பெண்கள் உலககோப்பை கால்பந்து- கனடாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் ஒரு கோலும் அடிக்கவில்லை.பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.
பெண்கள் உலககோப்பை கால்பந்து- கனடாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி
Published on

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி ரசோ 9-வது நிமிடத்திலும் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியிலும் ஆஸ்திரேலிய அணி 2 கோல்களை பதிவு செய்தது. மேரி ஃபோலர் மற்றும் ஸ்டீபனி கேட்லி ஒரு கோல்கள் அடித்தனர்.

இதனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை ஒரு கோல்களும் அடிக்கவில்லை. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com