உலகக் கோப்பை கால்பந்து: துருக்கியை 2-0 என வென்றது ஆஸ்திரேலியா

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நெஸ்டோரி ஒரு கோல் அடித்தார்.
australia
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.

இந்நிலையில், குரூப் டி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, துருக்கி அணிகள் மோதின.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நெஸ்டோரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் ஆஸ்திரேலியாவின் கானர் மெட்கால்ப் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-0 என முன்னிலை பெற்றது.

கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2-0 என துருக்கி அணியை வீழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com