சிஎஸ்கேவைத் தொடர்ந்து பயிற்சியாளர்களை கூண்டோடு தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது பயிற்சியாளர் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது.
சிஎஸ்கேவைத் தொடர்ந்து பயிற்சியாளர்களை கூண்டோடு தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!
Published on: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் தங்களது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

பொல்லார்டு தலைமைப் பொறுப்பை ஏற்ற சில தினங்களிலேயே, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களான லசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து பீல்டிங் பயிற்சியாளரான கார்ல் ஹாப்கின்சனும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஜெயவர்த்தனே அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.

பொல்லார்ட் தலைமையில் அமையவுள்ள புதிய பயிற்சியாளர் குழு, கோவாவில் நடைபெறவுள்ள 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக முழுமையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மும்பை நிர்வாகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்து வரும்நிலையில், இரு அணிகளும் வீரர்கள் மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

X