ஐவர் மகளிர் உலகக் கோப்பை ஆக்கி - நியூசிலாந்தை 11-1 கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா

உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஐவர் மகளிர் உலகக் கோப்பை ஆக்கி - நியூசிலாந்தை 11-1 கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா
Published on

ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com