உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டி முதல் சுற்று சமனில் முடிந்தது

உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா. உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டி முதல் சுற்று சமனில் முடிந்தது
Published on

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com