உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி
Published on

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com