

உலகின் முன்னணி கார் பந்தயமான F1 ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். உலகில் உள்ள முக்கிய நகரங்களில் பல்வேறு கட்டங்களாக போட்டி நடைபெறும். இறுதியில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார்.
பார்முலா ஒன் பந்தயத்தில் கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா கிராண்ட் பிரி பந்தயங்களும் அடங்கும். அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்த பந்தயங்கள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
சவுதி அரேபியாவில் நடத்தப்பட இருந்து கிராண்ட் பிரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைன் கிராண்ட் பிரி மலேசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில8் கத்தார் மற்றும் அபு தாபியில் கிராண்ட் பிரியை நடத்த FIA தயாராக இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளா்.
எங்கள் ஓட்டுநர்கள், குழுக்கள் மற்றும் ரசிகர்களுக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் எங்கள் பங்காளிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.