ஹாக்கியில் இந்தியாவுக்கு இரட்டை சவால்: ஆடவர் பிரிவில் பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை!

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.
Hockey Indian Team
Published on: 

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவுடன் கோதாவில் குதித்தது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை சாய்த்து இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணியில் இஷிகா சவுத்ரி (44-வது நிமிடம்), கேப்டன் சலிமா டெடி (48-வது நிமிடம்) கோலடித்தனர்.

மற்றொரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனான சீன அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- சீனா அணிகள் மோதுகின்றன. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் (பகல் 1 மணி) பலப்பரீட்சை நடத்துகிறது.

மற்றொரு அரை இறுதியில் தென்கொரியா-மலேசியா (மாலை 3.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com