ரிஷப் பண்ட்டை எனது ஆலோசகராகப் பார்க்கிறேன்- துருவ் ஜுரல் நெகிழ்ச்சி!

துருவ் ஜுரல் 6-வது விக்கெட்டுக்கு ரிஷப்பண்டுடன் இணைந்து 75 ரன் எடுத்தார்.
Rishab pant- Dhuruv Jurrel
Published on: 

வெல்லிங்டன் டெஸ்டில் 7-வது வீரராக களம் இறங்கிய துருவ் ஜுரல் அதிரடியாக விளையாடினார். அவர் 79 பந்தில் 78 ரன் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

துருவ் ஜுரல் 6-வது விக்கெட்டுக்கு ரிஷப்பண்டுடன் இணைந்து 75 ரன் எடுத்தார்.

ரிஷப்பண்ட் ஆலோசகர்

இந்தநிலையில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை துருவ் ஜுரல் வெகுவாக பாராட்டி உள்ளார். அவரை எனது ஆலோசகராக பார்க்கிறேன் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக துருவ் ஜுரல் கூறியதாவது:-

ரிஷப்பண்ட் மிகவும் அபாரமாக விளையாடினார். பேட்டிங் செய்யும்போது அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து எப்போதும் கேட்பேன்.

அவர் நிதானமாக விளையாடுவார் என நாம் அனைவரும் எதிர்பார்க்கும்போது, எதிர்பாராத விதமாக அதிரடியில் மிரட்டுவார். அவரை ஒரு ஆலோசகராக கருதுகிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X