யூத் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீராங்கனை தினிதி தேசிங்கு நீச்சல் போட்டியில் வரலாற்று சாதனை

100மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
தினிதி தேசிங்கு
தினிதி தேசிங்கு
Published on: 

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டி செனகல் நாட்டின் தலைநகர் டகாரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தினிதி தேசிங்கு (கர்நாடகா) 100மீ ப்ரீஸ்டைல் போட்டியில் கலந்து கொண்டார்.

சிறப்பாக செயல்பட்டு அவர் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் யூத் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், இந்த யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

X