காமன்வெல்த் விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
Published on

பிரிட்டன்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த பிரிவில் கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சமோவா நாட்டின் ஜேக் ஓபலாக் 358 கிலோ எடை தூக்கி வெற்றிப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com