ஐசிசி டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை: முதலிடம் பிடித்த சிக்கந்தர் ராசா

ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை: முதலிடம் பிடித்த சிக்கந்தர் ராசா
Published on

துபாய்:

ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் 2வது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 3வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் 1 விக்கெட்டும், பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிக்கந்தர் ராசா ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com