ஜிம்பாப்வே உடனான 2வது ஒருநாள் போட்டி: டிராவிஸ் ஹெட் சதத்தால் 356 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

கூப்பர் கானலி அரை சதம் கடந்து 78 ரன்னில் அவுட்டானார்.
head, marsh
Published on
Summary

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

மார்ஷ் அரை சதம்

முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

சதமடித்த டிராவிஸ் ஹெட்

2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார்.

கூப்பர் கானலி அரை சதம் கடந்து 78 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது.

பிராட் இவான்ஸ் 3 விக்கெட்

ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com