

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா சதமடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், ஜோஷ் இங்லீஸ் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
2-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 36 ரன்னில் வெளியேறினார்.
கூப்பர் கானலி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
5-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி - மேட் ரென்ஷா இணைந்தது. இந்த ஜோடி 72 ரன் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 27 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.
6வது விக்கெட்டுக்கு மேட் ரென்ஷா- ஆலிவர் பீக் ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் ஆலிவர் பீக் 30 ரன்னில் அவுட்டானார்.
மேட் ரென்ஷா பொறுமையுடன் ஆடி சதமடித்து அசத்தினார். ரென்ஷாவுக்கு இது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரென்ஷா 94 பந்தில் 109 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே சார்பில் நியூமென் நியாமுரி 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.