முத்தரப்பு டி20 தொடர்: நமீபியாவை போராடி வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றன.
ryan burl
Published on
Summary

நமீபியா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி வெற்றி பெற்றது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை நமீபிய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது.

ஜிம்பாப்வே - நமீபியா

இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே 195 ரன்கள்

அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரியான் பெர்ல் 32 பந்தில் 57 ரன்கள் குவித்தார். பென் கர்ரன் 38 ரன்னும், பிராட் ஈவான்ஸ் 37 ரன்னும் எடுத்தனர்.

நமீபியா சார்பில் கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

போராடிய நமீபியா

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

ஒருகட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 76 ரன் எடுத்து தடுமாறியது. அப்போது 7வது விக்கெட்டுக்கு இணைந்த சனே கிரீன் - அலெக்சாண்டர்

ஜோடி பொறுப்பாக ஆடி 109 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். சனே கிரீன் 54 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அலெக்சாண்டர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், நமீபியா அணி 20 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் நமீபியாவை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி திரில் வெற்றிபெற்றது.

ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவான்ஸ் 3 விக்கெட்டும், பிரியன் பென்னெட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com