டெஸ்ட், ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
Published on

ஹராரே:

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com