பாகிஸ்தானுக்கு எதிராக சாக் கிராலி அரை சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 96/1

இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டக் அவுட்டில் வெளியேறினார்.மற்றொரு தொடக்க வீரர் சாக் கிராலி அரை சதம் விளாசினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சாக் கிராலி அரை சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 96/1
Published on

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. ஷபீக் மற்றும் கேப்டன் மசூத் சதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மற்ற வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சாக் கிராலி- ஒல்லி போப் களமிறங்கினர். கேப்டன் போப் டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து கிராலியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார்.

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. கிராலி 64 ரன்னுடனும் ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com