வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய கொண்டாட்டத்தில் யூசப் பதான் செய்த நெகிழ்ச்சி செயல்

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய கொண்டாட்டத்தில் யூசப் பதான் செய்த நெகிழ்ச்சி செயல்
Published on

லீட்ஸ்:

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.

இந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை யூசப் பதான் சிக்சர் விளாசி முடித்து வைத்தார். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஓய்வு அறையில் இருந்த ஷிகர் தவான் நடனமாடி கொண்டாடினார். மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் யூசப் பதான் வெளியில் இருந்து போட்டியை ரசித்த சிறுவர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com