இலங்கையை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவை (57.69 புள்ளி) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை தென் ஆப்பிரிக்கா (59.26 புள்ளி) பிடித்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இலங்கையை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா
Published on

டர்பன்:

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 70 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இதனால் இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக தினேஷ் சண்டிமால் 83 ரன்கள், தனஞ்செயா டி செல்வா 59 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com