WTC இறுதிப் போட்டி: கம்மின்ஸ் அபாரம்- முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்த 138 ரன்னில் சுருண்டது.
WTC இறுதிப் போட்டி: கம்மின்ஸ் அபாரம்- முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா
Published on

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com