WTC இறுதிப் போட்டி: தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் சேர்த்தது.ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்சில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
WTC இறுதிப் போட்டி: தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
Published on

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (11ஆம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்னில் சுருண்டது.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். லபுசேன் (22), கவாஜா (6), கேமரூன் க்ரீன் (0), ஸ்மித் (13), டிராவிட் ஹெட் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அலேக்ஸ் ஹேரி தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க்கு தாக்குப்பிடித்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 1344 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நாதன் லயன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.

9ஆவது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக 207 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் கடைசி விக்கெட்டாக 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலியா 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com