ரசிகர்களால் தாக்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன்? வைரலாகும் வீடியோ

ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார்.
ரசிகர்களால் தாக்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன்? வைரலாகும் வீடியோ
Published on

வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் தலைமையில் வங்காளதேசம் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து தாயகம் திரும்பிய ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையில் வங்காளதேசம் அணி மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரை ரசிகர்கள் தாக்கியதாக செய்தி பரவியது. அந்த வீடியோவில் ரசிகர் கூட்டத்திற்குள் அவர் தடுமாறி வருகிறார். அதில் ஒரு ரசிகர் அவரை சட்டையை பிடித்து இழக்கிறார். அந்த கூட்டத்திற்குள் இருந்து வெளியே வந்த ஷாகிப் பதட்டத்துடன் காணப்பட்டார்.

இதன் உண்மை தன்மை என்னவென்றால், துபாயில் உள்ள ஒரு நகைக்கடையின் தொடக்க விழாவிற்கு ஷாகிப் அல் ஹசன் வருகை தந்துள்ளார். ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் வந்ததால் அவ்வாறு செய்திகள் பரவியிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com