உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியை காண மைதானம் வந்தார் பிரதமர் மோடி..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேர்த்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியை காண மைதானம் வந்தார் பிரதமர் மோடி..
Published on

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானம் வந்தடைந்தார். இவருடன் மத்திய மந்திரி அமித் ஷாவும் மைதானத்திற்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பல முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை சேர்த்தது. 241 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com