மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றம்

அக்டோபர் 3 முதல் 20 வரை 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது.இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது.
T20 WOMENS WORLD CUP - UAE
Published on

மும்பை:

20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருந்தது.

இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது. இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com