புள்ளிகள் பட்டியல்: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா அதிக ரன்ரேட்டை பெற்றுள்ளதுநடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது
புள்ளிகள் பட்டியல்: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.

நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும்.

நியூசிலாந்து 6 போட்டியில் 4-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6-ல் நான்கில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன்ரேட் குறைவால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின் வரிசையை பெற்றுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com