வில் யங் அதிரடி.. இந்தியாவுக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிராக இது அவரது முதல் சதமாகும்.
வில் யங்
Published on: 
Summary

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

5 ஒருநாள் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

4-வது ஒருநாள் ஆட்டம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் ஆட்டம் மவுன்ட் மவுங்கானுவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

காலை தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆட்டத்தை தொடங்கியது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் மற்றும் டிம் சீபர்ட் வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

டிம் சீபர்ட் 39 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து சீபர்ட் ஆட்டமிழந்தார்.

வில் யங் அதிரடி

தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தபோதும் வில் யங் வலுவான பேட்டிங்கை வழங்கினார்.

ஆரம்பத்தில் நிதானமாக பேட் செய்த யங், பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிரடியாக ஆடினார். வெறும் 88 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இது அவரது முதல் சதமாகும். 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யங் ஆட்டமிழந்தார்.

இதனிடையே ஆலன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னரை 24 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

இலக்கு

இறுதியாக 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 334 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகிப் நபி, குர்னூர் பிரார் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இந்தியாவுக்காக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் நமன் திர் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

X