உலகக்கோப்பையில் தொடர்ந்து நெதர்லாந்திடம் தோற்கும் தென்னாப்பிரிக்கா... இன்றாவது வெல்லுமா?

ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பையில் தொடர்ந்து நெதர்லாந்திடம் தோற்கும் தென்னாப்பிரிக்கா... இன்றாவது வெல்லுமா?
Published on

9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com