எப்போ ஓய்வு பெறலாம்? டோனி கொடுத்த அட்வைஸ் - முகமது ஷமி சொன்ன சீக்ரெட்

ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன். இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.
எப்போ ஓய்வு பெறலாம்? டோனி கொடுத்த அட்வைஸ் - முகமது ஷமி சொன்ன சீக்ரெட்
Published on

காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் முகமது ஷமி, யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவ்வகையில் எம்.எஸ்.டோனியின் ஓய்வு முடிவு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். "ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த விளையாட்டு உனக்கு சோர்வை தந்தால் ஓய்வு பெறலாம் அல்லது அணியிலிருந்து நீ ஓரம் கட்டப்பட்டால் ஓய்வு பெறலாம். ஆனால் இறுதியாக உனக்கு இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்று டோனி கூறியதாக ஷமி தெரிவித்தார்.

2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் டோனி ஓய்வு அறிவித்தது அந்த சமயத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com