நிகோலஸ் பூரன் அதிரடி - 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீசில் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
நிகோலஸ் பூரன் அதிரடி - 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
Published on

கயானா:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகீல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக வீசினார். முதல் பந்தில் பிராண்டன் கிங்கை அவுட்டாக்கினார். தொடர்ந்து 4வது பந்தில் ஜான்சன் சார்லசை வெளியேற்றினார். கைல் மேயர்ஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனுடன் ரோவ்மன் பாவெல் ஜோடி சேர்ந்தார். பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்த நிலையில் பாவெல் 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து பூரன் 67 ரன்னில் வெளியேறினார்.

16-வது ஓவரை சஹல் வீசினார். முதல் பந்தில் ஷெப்பர்ட் ரன் அவுட்டானார். 4-வது பந்தில் ஹோல்டர் ஸ்டம்ப்ட் அவுட்டானார். 6-வது பந்தில் ஹெட்மயர் எல் பி டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 3 ரன்னும், 18வது ஓவரில் 9 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com