முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
Published on

பார்படாஸ்:

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

10 ரன் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் இன்று தொடங்கியது. டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

அலெக்ஸ் கேரி 65 ரன்னும், வெப்ஸ்டர் 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com