4வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது.
4வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
Published on

செயிண்ட் லூசியா:

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 3-0 என கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 25 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜேக்கப் பெதெல் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை எடுத்துள்ளது. ஜேக்கப் பெதெல் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com