இந்திய தொடரில் ரூ. 285 கோடி வருவாய்: வெஸ்ட் இண்டீஸ்க்கு ஒன்னும் இல்லையாம்: காரணம் என்ன?

ஐசிசி-யின் வருவாய் பகிர்வில் கொண்டு வந்த மாற்றத்தால் விசிட்டிங் அணிக்கு ஆதாயம் இல்லை.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் தொடர்
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது.

டி20 தொடர்

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. நாளை கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இந்திய அணிக்கு உலகளவில கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் டி.வி. ஒளிபரப்பு உரிமம், விளம்பர தொகை, ஸ்பான்சர், டிக்கெட் விலை ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் 285 கோடி ரூபாய் வருவாய்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இந்த 8 போட்டிகள் மூலம் மொத்தமாக பிசிசிஐ-க்கு 20 மில்லியன் முதல் 30 மில்லியன் டாலர் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பண மதிப்பில் இருந்து 193 கோடி ரூபாய் முதல் 285 கோடி ரூபாய் வரை ஆகும்.

ஆனால், இந்த வருவாய் மொத்தமாக இந்தியாவுக்குதான் செல்லுமாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த பயனும் இல்லையாம். அவர்கள் தங்குவுதற்கான இடம் மற்றும் விளையாட்டுக்கான பயணம் ஆகியவற்றை மட்டும் இந்தியா செய்து கொடுக்குமாம்.

1997-ல் வருவாய் பகிர்வில் மாற்றம்

இதற்கு காரணம் 1997-ல் ஐசிசி வருவாய் பகிர்வு தொடர்பான கொண்டு வந்த விதிமுறைதான் காரணம். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில், போட்டியை நடத்தும் அணிக்குதான் 100 சதவீதம் வருவாய் செல்லும் வகையில் விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதை வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக எதிர்த்த போதிலும் 9 நாடுகளில் 8 நாடுகள் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வாக்களித்ததாம்.

இந்த விதிமுறைக்கு விசிட்டிங் அணிக்கும் அதிக வருமானம் கிடைக்குமாம். வெஸ்ட் இண்டீஸ் 1990-களில் மிகச் சிறந்த அணியாக திகழ்ந்ததால், பெரும்பாலான அணிகள் தங்கள் நாட்டில் வந்து விளையாடுமாறு அழைப்பு விடுப்பார்களாம். அதன்பின், வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சந்தித்தது. இதனால் வருவாயில் சிக்கல் ஏற்பட்டது.

அதோடு, வெஸ்ட் இண்டீசில் மக்கள் தொகை மிகவும் குறைவு. இதனால் வருவாய் ஈட்டுவது கடினம். இதனால் கிரிக்கெட்டிற்கான வருவாய் குறைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வருவாய் இல்லாமல் தவிக்கிறது. இதனால் பெரும்பாலான வீரர்கள் பிரான்சைஸ் டி20 லீக் நோக்கி சென்று விடுகிறார்கள்.

இந்த தகவலை வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் சிஇஓ டெஹ்ரிங் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com