லெவிஸ் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டிஎல்எஸ் விதிப்படி 196 ரன்கள் எடுத்து வென்றது.
லெவிஸ் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
Published on

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் இரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 23 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் அரை சதம் கடந்து தலா 56 ரன்கள் எடுத்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 36 ரன்கள் எடுத்தார்.

மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 23 ஓவரில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரண்டன் கிங் 16 ரன்னும், ஷாய் ஹோப் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்து ஆறுதல் வெற்றி பெற்றது. லெவிஸ் 102 ரன்னும், ரூதர்போர்டு 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கும், தொடர் நாயகன் விருது சரித் அசலங்காவுக்கும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com