மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 99 ரன்கள் எடுத்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
Published on

ஷார்ஜா:

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் அலிசா லிஸ்டர் மட்டும் 26 ரன்கள் எடுத்தார் .

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

X

Maalai Malar
www.maalaimalar.com