ரூதர்போர்ட் அதிரடி சதம்: முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

முதலில் ஆடிய வங்கதேசம் 294 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் எடுத்து வென்றது.
ரூதர்போர்ட் அதிரடி சதம்: முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
Published on

செயிண்ட்கிட்ஸ்:

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது. தன்ஜித் ஹசன் 60 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியின் ரூதர்போர்ட் அதிரடியாக ஆடினார். அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அவருக்கு ஷாய் ஹோப் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 86 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com