இரண்டாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

கிரெனடா:

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெயிட் டக் அவுட்டானார். பிராண்டன் கிங் 75 ரன்னும், ஜான் கேம்ப்பெல் 40 ரன்னும் எடுத்தனர். ஷமார் ஜோசப் 29 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 27 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com