17 ஆண்டுக்கு பிறகு சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்

டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
17 ஆண்டுக்கு பிறகு சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com