முதல் ஓவர் மெய்டன்.. அடுத்த ஓவரில் 4 சிக்சர்கள்.. அப்ரிடி ஓவரை விளாசிய நியூ, வீரர்- வைரல் வீடியோ

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதுஅப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
முதல் ஓவர் மெய்டன்.. அடுத்த ஓவரில் 4 சிக்சர்கள்.. அப்ரிடி ஓவரை விளாசிய நியூ, வீரர்- வைரல் வீடியோ
Published on

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.

முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com