யாரு சாமி இவன்.. பேட்டரிடமே ரிவ்யூ டவுட் கேட்ட ரிஸ்வான்.. வைரல் வீடியோ

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யாரு சாமி இவன்.. பேட்டரிடமே ரிவ்யூ டவுட் கேட்ட ரிஸ்வான்.. வைரல் வீடியோ
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்களாதேசம் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக வங்காளதேசம் அணி பேட்டிங் செய்த போது ரிஸ்வான் செய்த காரியத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அப்ரிடி வீசிய 43-வது ஓவரில் டஸ்கின் அகமதுக்கு அப்பில் கேட்கப்பட்டது. நடுவர் அதனை நிராகரித்தார். உடனே கீப்பரான ரிஸ்வான் பேட்டில் படவில்லை எனவும் ரிவ்யூ கேட்கலாம் என பாபர் அசாமிடமும் அப்ரிடியிடமும் முறையிட்டார்.

அவர்கள் இருவரும் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ரிஸ்வான் ரிவ்யூ கவுண்டவுன் ஓடிக் கொண்டிருக்கும் போதே பேட்ஸ்மனிடம் பந்து பேட்டில் பட்டதா என கேட்டார். அதற்கு பேட்டர் பதில் அளித்தவுடன் பாபரிடம் பார்த்தியா நான் சொல்லுவது சரி என்பது போல கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பாபர் அசாம், ரிவ்யூ கேட்காமல் நிராகரித்தார்.

பொதுவாக ரிவ்யூ கவுண்டவுன் முடிந்தவுடன் தான் பேட்டரிடம் பேட்டில் பட்டதா இல்லையா என்பது குறித்த சந்தேகத்தை எதிரணியினர் கேட்பார்கள். ஆனால் இவர் கவுண்டவுன் ஓடிக்கொண்டிருக்கும் போதே கேட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com