சிக்சரால் காயமடைந்த ரசிகை.. நேரில் சென்று பரிசளித்த பொல்லார்ட்- வீடியோ வைரல்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் முன்னேறியுள்ளது. தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து பொல்லார்ட் ஆறுதல் கூறினார்.
சிக்சரால் காயமடைந்த ரசிகை.. நேரில் சென்று பரிசளித்த பொல்லார்ட்- வீடியோ வைரல்
Published on

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்சரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து போட்டி முடிந்து பொல்லார்ட், தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com