

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர் அணியில் இருந்து தமிழக சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. இதையடுத்து,
இந்திய அணி நியூசிலாந்தில் 5 டி20 மற்றும் ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர் அணியில் இருந்து தமிழக சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பஞ்சாபின் பேட்டிங் ஆல்-ரவுண்டர் நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டு, வாஷிங்டன் சுந்தரை இந்த தொடரிலிருந்து விடுவிக்கத் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், அக்டோபர் 11 முதல் ரஞ்சி கோப்பை சீசன் தொடங்குவதால், வாஷிங்டன் தனது மாநில அணிக்காக விளையாடி டெஸ்ட் தொடருக்குத் தயாராக இந்த வாய்ப்பு உதவும் என தெரிவித்தார்.