இங்கிலாந்து- இந்தியா தொடருக்கான IMPACT PLAYER விருதை வென்ற வாஷிங்டன் சுந்தர்

இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. சுந்தர் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து- இந்தியா தொடருக்கான IMPACT PLAYER விருதை வென்ற வாஷிங்டன் சுந்தர்
Published on

இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான 'IMPACT PLAYER' விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com