டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்காக அதிக விக்கெட்: மலிங்கா சாதனையை முறியடித்த ஹசரங்கா...

இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.
டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்காக அதிக விக்கெட்: மலிங்கா சாதனையை முறியடித்த ஹசரங்கா...
Published on

டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது.

பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இலங்கை அணியின் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான ஹசரங்கா புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலிங்காவின் 107 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் ஒரு மைல்கல்லை எட்டினார்.

டி20 ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com